கர்ம பாவமான 10-ஆம் பாவத்தில் புதன் இருக்க ஜாதகர் மேன்மைமிக்க புத்திசாலித்தனம் உடையவராக வும், மேன்மைமிக்க செயல் பாடுகளை செய்ய வல்லவராக வும், செய்யும் காரியங்களில் அடைய விரும்பும் நல்ல முடிவுகளை அடைபவராகவும், மெத்தப் படித்தவராகவும், தைரியமிக்கவராகவும், பலம் மிக்கவராகவும் மற்றும் பல்வேறு வகையான ஆபரணங்களை உடையவராகவும் இருப்பார்.
(சாராவளி)
* ஜாதகர், மாதா, பிதா, குரு, தெய்வம் என பெரியவர்கள்மீது மிகுந்த பக்தி உடையவராக இருப்பார். மிகுந்த செல்வந்த ராக இருப்பார். தனது சுய முயற்சி யால் சொத்து சுகம் மற்றும் அநேக வீடுகள் உடையவராக இருப்பார்.
(மானசாகரி)
* ஜாதகர் வெற்றிகரமாக நற்காரியங்களை செய்வார். மிகவும் பொறுமையானவர்.
மரியாதை மிகுந்தவராக சுற்று வட்டாரத்தில் புகழ்மிக்கவராக திகழ்வார். மிகப்பெரிய சிந்தனை யாளராக இருப்பார். தனது 28-ஆவது வயதில் கண் பிரச் சினை காரணமாக அவதிப் படுவார்.
(பிருகு சூத்திரம்)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puthan_3.jpg)
* ஜாதகருக்கு பரம்பரை சொத்துகள் அமையும். அந்த சொத்துகளின் காரணமாக பெயர், புகழ் மற்றும் நல்ல அங்கீகாரத்தையும் பெறுவார்.
விவேகமுள்ளவர், ஆளுமை மிக்கவர். மேலும், நீதியை நிலை நாட்டுவதில் வல்லவராக இருப்பார். அன்பளிப்புகளை பெறுவதிலோ அல்லது தண்டனை ஏற்றுக் கொள்வதில் உறுதியானவர். தந்திரம் மிக்கவர். இனிமையாக பேசுபவர். சிறந்த பேச்சாளர். சொத்து சுகம், வண்டி, வாகனம், ஆடை, ஆபரணங்கள் என அனைத்தும் உடையவராக இருப்பார். அவர் ஒவ்வொரு காரியங்களிலும் முன்னேற்றம் காண்பர்.
(சமத்கார சிந்தாமணி)
* ஜாதகர் அனைத்தையும் கற்றுக்கொள்வதில் வல்லவர். ஞானம்மிக்கவர். தரமான நல்ல காரியங்கள் செய்வதில் வல்லவர். அனைத்துவிதமான செல்வங்களும், சொத்துகளையும் உடையவர். அரசனிடம் இருந்து மரியாதையையும், கௌரவத்தையும் பெறுவார். சுவையாக பேசக்கூடியவர் மற்றும் உணர்ச்சிமிக்கவர் அல்லது இன்பத்தை, சுகத்தை மிகவும் விரும்புபவன்.
(ஜாதக ஆபரணம்)
* இரக்கம்மிக்கவர். அரசர்களுக்கு இடையே மிகவும் மதிப்பு மிக்கவராக விளங்குவார். பணக்காரராக திகழ்வார்.
(கேத் கௌதக்).
= கவர்ச்சிகரமான, திடகாத்திரமான உடல் அமைப்பை உடையவர். அதிர்ஷட சாலி, நற்குணம்மிக்கவர். சகல சௌபாக்கியங் களும் உடையவர். பெண்கள்மீது விருப்ப மிக்கவர். நியாயத்திற்கு புறம்பாக நடக்க மாட்டார்.
(ஹோரா ரத்னம்)
* பெரியவர்கள் மற்றும் குரு ஆகியோரிடம் இருந்து, அவர்களின் மதிப்பு, மரியாதை குறையாத வகையில் செயல் படுவார். சுயமாக சம்பாதித்து சொத்துகள், மண், மனை, வீடுகள், யானை, குதிரை வாகனங்கள் ஆகியவற்றோடு அனைத்துக் சுகங்களும் அனுபவிப்பார். நண்பர்கள் மட்டுமின்றி, அனைவரிடத்திலும் அளவோடு குறைவாக பேசுவாரேயன்றி அதிகம் பேச மாட்டார்.
(மார்கண்டேய ஜோதிடம்)
* ஜாதகர் குபேரனை ஒத்த செல்வத்துக்கு கடவுள் ஆவார். தாராளமாக தானதர்மங்கள் செய்வார். புத்திசாலி மற்றும் புகழுடையவர். உண்மையானவர்.
(ஹோரா சாரா)
* கவிதைகள் எழுதுவதில் வல்லவர். ஆசார அனுஷ்டானங்கள் தவறாமல் கடைபிடிப்பவர். தெய்வபக்திமிக்கவர்.
(புலிப்பாணி ஜோதிடம்)
*ஜாதகர் சக்திமிக்கவர், கற்றறிந்த மேதை, வார்த்தை மாறாதவர். சந்தோஷமானவர், நற்குணம்மிக்கவர். ஆரம்பம்முதல் கடைசி வரை எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும்.
(பலதீபிகா).
* 10-ஆம் வீட்டில் அமர்ந்த புதன் ஜாதகரை சிறந்த வியாபாரி ஆக்கி விடுகிறது.
(சாதக தத்வா)
* வளர்பிறைச் சந்திரன் 4-ஆம் வீட்டில் அல்லது பலம்மிக்க சுக்கிரன் 7-ஆம் வீட்டில் அல்லது புதன் 10-ஆம் வீட்டில் இருந்தால் 10-ஆம் வீட்டின் காரகங் கள் மிக அனுகூலமானதாக அமையும். மேலும், பெற்றோர்கள், தாய்வழி மற்றும் தந்தைவழி மாமன்கள் மூலம் ஜாதகர் மிகுந்த சந்தோஷங்களை அனுபவிப்பார்.
(சம்பு ஹோரா பிரகாசிகா)
* புதன் 10-ஆம் வீட்டில் இருந்து மற்றும் 10-ஆம் அதிபதி 9 -ஆம் வீட்டில் அதுவும் அசுபர் தாக்கமின்றி, சுபர் தாக்கம் பெற்று மேலும், 9-ஆம் வீடு சுபர் வீடானால் சாதகர் பொது சேவைகளில், மக்களுக்கான சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். புதன் பத்தாம் அதிபதியாகி, அவரின் உச்ச வீட்டில் அல்லது 9-ஆம் வீட்டில் ராகு- கேதுவின் தாக்க மின்றி இருக்க பொதுசேவையில் ஈடுபடு வார். லக்கினத்திற்கு 10-ஆம் வீட்டில் புதன் இருக்க ஜாதகருக்கு பலதார யோகம் ஏற்படுகிறது.
(சர்வார்த்த சிந்தாமணி)
1. கர்ம பாவத்தில் புதன் இருக்க ஜாதகர் தியாக மனப்பான்மையுடன், சேவை செய்வார். புதனுடன் ராகு- கேது தொடர்பு கொண்டால் ஜாதகர் மத சம்பந்தமான விவகாரங்களை அழித்துவிடுவார். புதனுக்கு அல்லது 10-ஆம் பாவத்திற்கு 10-ல் ராகு இருந்தால் ஜாதகர் தியாகங்களை அழிப்பவராக இருப்பார்.
2. நவாம்சத்தில் 10-ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்தவன் புதனாக இருந்தால் ஜாதகர் கலை, கவிதை, பாரம்பரிய மத கோட்பாடுகள் தொடர்புடைய தொழில், ஜோதிடம், வேதம் ஓதுதல், சாஸ்திரியார், ஆச்சாரியார், மத சம்பந்தமான வீட்டு விசேஷங்களை நடத்திவைக்கும் வாத்தி யார் மற்றும் வைதீக காரியங்கள் செய்வது போன்ற வேலைகளை செய்து அதன் மூலம் தனது சம்பாத்தியத்தை பெருக்கிக் கொள்வார்.
3. சந்திர ராசியில் இருந்து 10-ல் புதன் இருக்க ஜாதகர் கற்று தேர்ந்தவராக விளங்குவார்.
4. சந்திரனுக்கு 10-ஆம் வீட்டில் சூரியனும், புதனும் இருக்க ஜாதகருக்கு நட்சத்திரங்களை பற்றிய அறிவும் மற்றும் நீர், பெண்கள் மற்றும் ஆபரணங்கள்மூலம் உருவாகும் மதிப்புமிக்க பொருட்களை நிரூபிக்கும் ஆர்வமும் இருக்கும்.
5. ராசிக்கு 10-ல் செவ்வாயும் புதனும் இணைந்து இருக்க, ஜாதகர் தனது விஞ்ஞான அறிவின்மூலம் தன் வாழ்வா தாரத்தை பெருக்கிக் கொள்வார்.
6. ராசிக்கு 10-ஆம் வீட்டில் குருவும் புதனும் இணைந்திருக்க ஜாதகர் மலட்டுத் தன்மை உடையவராக இருப்பார். உற்சாக மற்ற, விசனமான பேச்சையும் உடையவர். புகழற்றவராகவும், அரசன் மூலம் அனுகூலங்கள் அற்றவராகவும் விளங்குவார்.
7. ராசிக்கு 10-ஆம் வீட்டில் சுக்கிரனும் புதனும் இணைந்திருக்க ஜாதகர் நல்ல விதமாக கற்றல், நல்ல மனைவி மற்றும் அதிக சொத்துகள் ஆகியவற்றால் ஆசிர்வதிக் கப்பட்டவர் ஆவார்.
8. ராசிக்கு 10-ஆம் வீட்டில் சனியும் புதனும் இணைந்திருக்க ஜாதகர் தேவை யற்ற வழிகளில் முயற்சிகளை மேற்கொள்பவராகவும், புத்தகங்களை காப்பியடிப்பவராகவும் திகழ்வார்.
9. 10-ஆம் வீட்டில் புதன் சம்பந்தப் பட்டால் ஜாதகர் வர்த்தகம் தொடர்பான பரிமாற்றங்களில் ஈடுபடுவார். 10-ஆம் வீட்டில் உள்ள சுப- அசுப கிரகங்கள் தன்மை யைப் பொறுத்து அவர் சுறுசுறுப்பானவராகவோ, சோம்பேறியாக அல்லது இரு குணங்களும் கொண்டவராக இருப்பார்.
(ஜாதக பாரிஜாதம்)
* 10-ஆம் வீட்டில் புதன் இருக்கும் ஜாதகர், அறிவாளியாகவும், சொத்துகளை உடையவராகவும், குழந்தை செல்வங்கள், நண்பர்கள் மற்றும் வாகனங்களை யும் உடையவர். பல ஆபரணங் கள் கொண்டு அலங்கரித்துக் கொள்வார். அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தும் உபாயங் களையும் அறிந்திருப் பார். அவரின் செயல்பாடு களில் ஆரம்பத்தில் மகிழ்ச்சி யாக இருப்பார். அந்த மகிழ்ச்சி தொடர்ந்து இருக்கும். 10-ஆம் இடத்தில் புதன், கேது, குரு ஆகியோர் இருக்க ஜாதகர் எப்போதும் பேனா, பேப்பர் மற்றும் புத்தகமும் கையுமாக இருப்பார்.
* புதன் 10-ல் அமர்ந்த ஜாதகர் கற்றறிந்த வராகவும், தர்மம், நற்குணம் மற்றும் ஆசார அனுஷடானங்களைக் கடைபிடிப் பவராகவும் இருப்பார். மன உள்ளுணர்வு களை கிரகித்துக்கொள்ளும் திறமைமிக்க வராக இருப்பார்.
(ஜாதக சம்புநாதீயம்)
10-ஆம் வீட்டில் ராகுவுடன், புதன், சந்திரன் அல்லது சுக்கிரன் இணைந்து சண்டாள யோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் அவர் பிறந்த மத கோட்பாடுகளை பின்பற்றாமல் அதற்கு மாறாக நடப்பார். இந்த நூலில் கர்ம ரகிதா என்று குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைக்கு, ஜாதகர் தன் கடமைகளை சரிவர செய்ய மாட்டார் என்பது பொருளாகும்.
(ஜோதிஷார்ணவ நவநீதம்)
* புதன் 10-ல் உள்ள ஜாதகர் மிகச்சிறந்த வியாபாரியாகவும், அதிகம் பேசக்கூடியவராகவும் இருப்பார். கற்று தேர்ந்தவர், பலசாலி, புத்திசாலி, புகழுடையவர், சுக சௌக்கியங்களை உடையவர், நற்காரியங்களில் ஈடுபாடு உடையவர் மற்றும் உண்மையும் நேர்மையும் உள்ள நபராக திகழ்வார்.
(பிரம்ம ரிஷி வாக்கியம்)
* லக்னம் அல்லது சந்திரனுக்கு 10-ஆம் வீட்டிலுள்ள கிரக காரகங்கள் பொறுத்து ஜாதகரின் வாழ்வாதாரத்திற்கான தொழில் அமையும். லக்னம் அல்லது சந்திர லக்னத்துக்கு 10-ஆம் வீட்டில் எந்த ஒரு கிரகமும் இல்லையெனில், இவை இரண்டில் எந்த 10-ஆம் அதிபதி பலம் மிக்கவராக உள்ள கிரக காரகத்துவப் படி தொழில் அமையும். பிருஹத் ஜாதகத் தில் அதே விதிகள் குறிப்பிடப் பட்டுள்ளன.
(பாவ குதூகலம்)
ஜாதக சார தீபத்தில்
1. லக்னம்- சந்திரன்- சூரியன்-ல் இருந்து 10-ஆம் இடத்தில் சுக்கிரன் மற்றும் புதன் இணைந்து இருக்கவும் அல்லது குரு 10-ல் இருக்கவும் அல்லது சந்திரனில் இருந்து 10-ஆம் இடத்தில் குரு, புதன் அல்லது சுக்கிரன் இருக்கவும், ஜாதகர் எல்லா இடத்திலும், எல்லாவற் றிலும் வெற்றிமேல் வெற்றி அடைவார். அவர் செய்யும் காரியங்களையும் சுலப மாக செய்துவிடுவார்.
2. லக்னத்தில் இருந்து 10-ஆம் வீட்டில் புதன் இருக்க ஜாதகர் மேதை யாகவும், தைரியசாலியாகவும், வெற்றி யாளராகவும், மிக்க திறமைசாலியாக வும், சாத்வீகமானவராகவும் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் விளங்குவார்.
நற்காரியங்கள் செய்பவராகவும் இருப்பார்.
10-ஆம் வீட்டில் புதனுடனான பிற கிரக இணைவுக்கான பலன்கள்-
புதன்+சூரியன்- ஜாதகர் உயர் ரக வாகனங்கள், அசையா சொத்துகள் பெற்று புகழுடன் வாழ்வான். இதில் ஏதாவது ஒன்று நீச கிரகமானால் மேற் சொன்ன பலன்கள் ஏற்படாது. சாதக சரதீபிகாவில்- ஜாதகர் மிகவும் புத்திசாலியாகவும், புகழ் உடையவராகவும், ஆசைகளில் இருந்து விடுபட்டவராகவும், பிறர் மேல் பிரிய முடையவராகவும், உண்மை உள்ளவராகவும் மற்றும் விசுவாசமானவராகவும் விளங்குவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதன்+சந்திரன்- ஜாதகர் புகழுடையவர், செல்வம்மிக்கவராக இருப்பார். உறவுகளால் ஒதுக்கி வைக்கப்படுவார். சுயமரியாதை உடையவர். வாழ்வின் கடைசி காலத்தில் மனவருத்தமும், துக்கம் நிறைந்தவராகவும் இருப்பார். பிராமணர்களுக்கு அனுகூலமாக இருப்பார். எப்போதும் சுறுசுறுப்புள்ள, ஊக்கமுடைய, கடின உழைப்பு உழைக்கக்கூடியவராக இருப் பார். துணிவுள்ள காரியங்களை செய்து, சுற்று வட்டாரத்தில் புகழ்மிக்கவராக விளங்குவார்.
புதனின் சாதக- பாதக நிலைகள் இந்த கட்டுரையின்மூலம் அறிந்தது வாசகர் களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். வாழ்க வளமுடன்.
செல்: 97891 01742
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-02/puthan-t.jpg)